அமெரிக்க சமூக பாதுகாப்பு நிர்வாகத்தில் பணியாற்றும் 7,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய டிரம்ப் அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவி ஏற்ற டொனால்ட் டிரம்ப் அரசு நிர்வாக செலவுகளை குறைக்க, நிர்வாகத்தை சீரமைக்க டிஓஜிஇ என்ற என்ற பெயரில் சிறந்த நிர்வாகத்துக்கான அமைப்பை உருவாக்கி உள்ளார். இந்த அமைப்பின் தலைவராக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த டிஓஜிஇ அமைப்பு ஏற்கனவே பல அரசு ஊழியர்களை விருப்ப ஓய்வு பெற சொல்லியும், பலரை பணி நீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக டிரம்ப் தலைமையில் அண்மையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் வரும் 13ஆம் தேதிக்குள் தேவையற்ற அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்யும்படி உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் அமெரிக்க சமூக பாதுகாப்பு நிர்வாகத்தில் பணியாற்றும் 60,000 பணியாளர்களில் 7,000 பேரை பணி நீக்கம் செய்ய டிரம்ப் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சில பணியாளர்களுக்கான ஊதிய குறைப்பு, பணப்பலன்களில் குறைப்பு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.