இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்!

தனது குடும்பத்தினருடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்
தனது குடும்பத்தினருடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்
Published on

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், 4 நாள் பயணமாக இன்று இந்தியா வந்திருக்கிறார். அவரது மனைவியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான உஷாவும் உடன் வந்துள்ளார்.

குடும்பத்தினருடன் இந்தியா வந்த அமெரிக்க துணை அதிபரை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வரவேற்றார். ராணுவ அணிவகுப்பு மரியாதையையும் பரதநாட்டிய கலை நிகழ்ச்சியையும் வான்ஸ் தம்பதி கண்டு களித்தனர்.

தொடர்ந்து அவர்கள் டெல்லியில் உள்ள அக்சர்தாம் கோயிலுக்குச் செல்ல உள்ளனர். மேலும் பாரம்பரிய இந்திய கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் வணிக வளாகத்திற்கும் செல்கிறார்கள்.

ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளிக்கிறார். அப்போது இரு தலைவர்களும் வர்த்தகம், வரி உள்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை ஜெய்ப்பூருக்கு செல்லும் ஜே.டி.வான்ஸ் மற்றும் குடும்பத்தினர் அங்கு அமர் கோட்டை உட்பட பல வரலாற்று தலங்களுக்கு சென்று பார்வையிடுகிறார்கள்.

23ஆம் தேதி ஆக்ராவுக்கு சென்று தாஜ்மகாலுக்கு செல்கிறார்கள். பின்னர் ஜெய்ப்பூருக்கு சென்று அங்கிருந்து 24-ஆம் தேதி அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்கிறார்கள். உஷாவின் சொந்த ஊரான ஆந்திர மாநிலம் கோதாவரிக்கும் செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com