டிடிஎஃப் வாசன்
டிடிஎஃப் வாசன்

‘வீலிங்’ செய்த போது விபத்து: உயிர்தப்பிய டி.டி.எஃப். வாசன் மீது வழக்கு!

இருசக்கர வாகனத்தில் அதிவேக ஆபத்து சாகசம் செய்தபோது, பிரபல யூட்யூபர் டி.டி.எஃப். வாசன் உயிர்தப்பினார். அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டி.டி.எஃப். வாசன் என்பவர் இருசக்கர வாகன அதிவேக சாகசங்களின் மூலம் யூ டியூபில் பிரபலமானவராக அறியப்படுகிறார். யூ டியூபில் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இவர், அடிக்கடி அதிவேகமாக வாகனததை இயக்கி சாகசங்களை மேற்கொண்டு வருவார்.

அந்த வகையில், காஞ்சிபுரத்திற்கு அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் முன்சக்கரத்தைத் தூக்கி சாகசம் செய்து காட்டியபடி சென்றார்.

கண் இமைக்கும் நேரத்தில், அந்த வாகனம் இரண்டு முறை தலைகீழாகச் சுழன்று சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், டிடிஎஃப் வாசன் கையில் படுகாயம் ஏற்பட்டு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சை அளிப்பதற்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில், வாசன் மீது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்பட்ட பிரிவுகளின் கீழ் பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வாசன், மஞ்சள் வீரன் என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com