ஆளுநரின் மாநாட்டை புறக்கணித்த துணைவேந்தர்கள்!

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி
Published on

உதகையில் ஆளுநர் ஆர்.என். ரவி நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களும், தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களும் புறக்கணித்துள்ளனர்.

தமிழக அரசுக்கு போட்டியாக ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டி அளுநர் மாளிகையில் இன்றும் நாளையும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த மாநாட்டில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

இதற்காக அவர், இன்று காலை டெல்லியிலிருந்து விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் காலை 11.15 மணிக்கு ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் தரையிறங்குகிறார். அங்கு அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு உயர் அதிகாரிகள் வரவேற்கின்றனர்.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகரும் பாதியில் மாநாட்டை புறக்கணித்துவிட்டு திரும்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதேபோல், தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களும் துணைவேந்தர்கள் மாநாட்டை புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஆளுநர் மாளிகை விளக்கம்

அழைப்பு விடுக்கப்பட்ட 52 பல்கலைக்கழகங்களில் 34 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com