குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப் பட்டது என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரின் பதவிக்காலம் 2027ஆம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், நேற்று இரவு திடீரென ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார். மேலும், தன் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.
அதில், மருத்துவ காரணங்களுக்காக பதவி விலக முடிவு எடுத்ததாக ஜக்தீப் தன்கர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், இன்று குடியரசுத் துணை தலைவர் ஜக்தீப் தன்கரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
யார் இந்த ஜக்தீப்?
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 1951ஆம் ஆண்டு பிறந்த ஜகதீப் தன்கர், 1990ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை பிரதமர் சந்திரசேகர் அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணையமைச்சராக பதவி வகித்தார்.
கடந்த 2003ஆம் ஆண்டு தான் இவர் பாஜகவில் இணைந்தார். 2019 முதல் 2022 வரை வரை மேற்குவங்க ஆளுநராக இருந்தவர்.
கடந்த 2022இல் குடியரசுத் துணைத் தலைவராக ஜக்தீப் தன்கர் பொறுப்பேற்றவர் தற்போது ராஜினாமா செய்துள்ளார்.