மதுரையில் நடைபெற்ற உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றிமாறன் உட்பட பல திரை பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு, மதுரையில் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதிவரை நான்கு நாள்கள் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், மாநாட்டு அழைப்பிதழை மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ளார்.
மாநாட்டில், அக்கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், கேரளா முதல்வர் பினராய் விஜயன். பிருந்தா காரத், திரிபுரா முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ஏப்ரல் - 1 ஆம் தேதி தமுக்கம் மைதானத்தில் மூத்த பத்திரிக்கையாளர்கள் என். ராம், வி.பரமேஸ்வரன் ஆகியோர் திறந்து வைக்கும் கண்காட்சியில் கட்சியின் வரலாறு, பாசிசத்தின் கோர நிகழ்வுகள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்து காட்சிப்படுத்தப்பட உள்ளது. புத்தகக் கண்காட்சியும் அமைக்கப்பட உள்ளது.
சென்னையிலிருந்து சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவுச் சுடர், சேலம் சிறை தியாகிகள் நினைவுச் சுடர், கோவை சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவுச் சுடர், மாணவத் தியாகிகள் சோமசுந்தரம் செம்புலிங்கம் நினைவுச் சுடர், மதுரை தியாகிகள் நினைவுச் சுடர் அன்றைய தினம் பெறப்படுகிறது.
கீழ்வெமணியிலிருந்து பிரசார இயக்கமாக எடுத்து வரப்படும் தியாகிகள் நினைவுக்கொடி 1- ஆம் தேதி மாநாட்டில் ஏற்றப்பட உள்ளது.
அதேபோல் மாநாடு தொடங்கிய இரண்டாம் தேதி பாப்பம்பட்டி ஜமாவின் கலைநிகழ்ச்சியோடு மாநாடு தொடங்குகிறது. பின்னர் பிரதிநிதி மாநாடு நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு நடைபெறும் பொது மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் து.ராஜா. சிபிஐ (எம்.எல்) பொதுச்செயலாளர் திபாங்கர் பட்டாச்சாரியா, ஆர்.எஸ்.பி பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சாரியா, பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் ஜி.தேவராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேச உள்ளார்கள்.
அன்று மாலை சாலமன், பாப்பையா, இயக்குநர்கள் ராஜூ முருகன், சசிகுமார் ஆகியோ மாநாட்டை வாழ்த்தி பேசுகிறனர்.
3-ஆம் தேதி மாலை 'கூட்டாட்சி கோட்பாடு இந்தியாவில் வலிமை' என்ற மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாட்டில் கேரளா முதல்வர் பினராய் விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ணா பைரே கௌடா கலந்து கொள்கிறார்.
ஏப்ரல் 4ஆம் தேதி பல்வேறு கலைக்குழுக்களின் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. திரைக்கலைஞர்கள் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர்.
ஏப்ரல் 5ஆம் தேதி திரைக்கலைஞர் ரோகிணியின் ஓராள் நாடகத்துடன் சித்தன் ஜெயமூர்த்தியுன் இசை மக்கள் இசைப்பாடல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. பின்னர் திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ், இயக்குநர்கள் மாரி செல்வராஜ், த.செ. ஞானவேல் ஆகியோர் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.
ஆறாம் தேதி வண்டியூர் ரிங் ரோட்டில் கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ.வாசுகி, பி. சம்பத் கலந்து கொண்டு பேச உள்ளார்கள்.