யூடியூபரை விரட்டி விட்ட விஜய் கட்சியினர்!

யூடியூபர் முக்தார்
யூடியூபர் முக்தார்
Published on

தவெக மாநாடு தொடங்கிய சிறிது நேரத்தில் அங்கிருந்த பிரபல யூடியூபரான முக்தாரை வெளியேற்றியுள்ளனர் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள். மாநாட்டின் முகப்பு வரை கூடவே வந்து, அவரை வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது.

நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டை இன்று நடத்துகிறார். திட்டமிட்டதற்கு முன்னதாகவே மாநாடு தொடங்கியுள்ளது.

கடும் வெயில் கொளுத்திய நிலையில் மாநாட்டை முன்னரே தொடங்குவதாக அறிவித்தார் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த்.

இந்த நிலையில் மாநாடு தொடர்பாக செய்தி சேகரிக்க தமிழ்நாடு மட்டுமல்லாது வட மாநிலங்களிலிருந்து கூட பிரபல செய்தி சேனல்களில் நிருபர்கள், ஒளிப்பதிவாளர்கள் மாநாட்டில் குவிந்துள்ளனர். அந்த வகையில் பிரபல யூடியூபரான முக்தார் அகமது மாநாட்டுக்கு வந்திருந்தார். முக கவசத்துடன் கண்ணாடி அணிந்தபடி மாநாட்டு திடலில் இருந்த அவரை தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் வெளியேற்றியுள்ளனர்.

மேலும் முக்தார் வெளியேற வேண்டும் என முழக்கமிட்டபடி காவல்துறை உதவியுடன் மாநாட்டு மேடையிலிருந்து மாநாட்டு முகப்பு வரை அவரை கூடவே அழைத்து வந்து வெளியேற்றி இருக்கின்றனர். மாநாடு தொடர்பாக திட்டமிட்டு அவதூறான செய்திகளை பரப்பியதாகவும், அதன் காரணமாகவே அவரை வெளியேற்றியதாக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com