யுவன் சந்திரசேகர்
யுவன் சந்திரசேகர்

யுவன் சந்திரசேகருக்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது!

நடப்பு 2023 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது யுவன் சந்திரசேகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.

இதுவரை, குள்ளச் சித்தன் சரித்திரம், பகடையாட்டம், கானல்நதி, மணல்கேணி, வெளியேற்றம், பயணக்கதை ஆகிய நாவல்கள்,

வேறொருகாலம், புகைச்சுவருக்கு அப்பால் ஆகிய கவிதை நூல்கள், யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்,ஒளிவிலகல் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் யுவன் சந்திரசேகர் எழுதியுள்ளார்.

முன்னதாக, பயணக்கதை நாவலுக்கு 2011-ம் ஆண்டு புனைவுப்பிரிவில் கனடா இலக்கிய தோட்டம் விருது வழங்கப்பட்டது.

“நவீன தமிழிலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த முன்னோடி படைப்பாளுமைகளைக் கவுரவிக்கும் விதமாக 'விஷ்ணுபுரம் விருது' கடந்த 2010ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது கலையம்சம் மிக்க விருதுச் சிற்பமும், பாராட்டுப் பத்திரமும், ரூ.2,00,000/-விருதுத் தொகையும் உள்ளடக்கியது.” என்று விருதுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com