செய்திகள்
நாடு முழுவதிலும் உள்ள அருங்காட்சியகங்கள், தொல்லியல் நினைவிடங்களை இன்று பொதுமக்கள் கட்டணமின்றி பார்வையிடலாம் என்று மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது.
சர்வதேச அருங்காட்சியக தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சர்வதேச அருங்காட்சியக கவுன்சில் இந்த தினத்தை ஏற்பாடு செய்கிறது. இந்த நாளில் அருங்காட்சியகங்கள் மற்றும் அவற்றின் கலைப்பொருட்கள் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதற்காகவும், அருங்காட்சியகங்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கும் விதமாகவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இந்ந நிலையில் சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்லியல் நினைவிடங்களை இன்று பொதுமக்கள் கட்டணமின்றி பார்வையிடலாம் என்று மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது.