மாணவர்களின் உடல்நலன் கருதி தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் நேற்று முன்தினம் (ஜுலை 28) அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.
அதில், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில், ஜூலை மாதம் முதல் நாள் ஒன்றுக்கு காலை 11 மணிக்கும், பகல் 1 மணிக்கும், பிற்பகல் 3 மணிக்கும் மூன்று முறை வாட்டர் பெல் அடிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
வெயிலின் தாக்கத்தால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது என்றும், மாணவர்களின் உடலில் ஏற்படும் நீர்ச்சத்துக் குறைபாடு கற்றல் திறனை பாதிக்கும் என்பதால் இந்த உத்தவு பிறப்பிக்கப்படுவதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், அரசு பள்ளிகளில் இன்று காலை 11 மணிக்கு வாட்டர் பெல் அடிக்கப்பட்டது. மாணவர்களின் நலன் காக்கும் அரசின் இந்த புதிய முயற்சி மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.