இந்தியாவிலேயே நாம தான் பெரும்படை! – விஜய்

TVK Leader Vijay
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்
Published on

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படையாக த.வெ.க. உள்ளது என்று விஜய் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தின் போது விஜய் வீடியோ கால் மூலமாக பேசுவதாக இருந்தது. ஆனால் விஜய் வீடியோ ரெக்கார்டு செய்து பேசிய காட்சி ஒளிபரப்பட்டது.

அந்த வீடியோவில் பேசிய விஜய், "மீட்டிங்க் நடக்கும் போதே உங்களிடம் பேச வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் இங்க கொஞ்சம் நெட்வொர்க் பிராப்ளம். அதனால் தான் என்னால் அப்படி செய்ய முடிவில்லை. வீடியோ ரெக்கார்டு செய்து அனுப்பியிருக்கிறேன். உங்க எல்லாரையும் சந்திப்பதில் ரொம்ப சந்தோஷம். நம்முடைய இந்த சோஷியல் மீடியா படையை தான் இந்தியாவிலேயே மிகப்பெரும் படையாக சொல்கிறார்கள்.

இதனை நம்ம சொல்கிறதை விட மற்றவங்களே பார்த்து சொல்றாங்க... இனிமேல் நீங்க எல்லாரும் சோஷியல் மீடியா பேன்ஸ் மட்டும் கிடையாது. என்ன பொறுத்தவரைக்கும் நீங்கள் எல்லாரும் நம் கட்சியுனுடைய விர்ச்சுவல் வாரியர்ஸ். இப்படித்தான் உங்கள் எல்லாரையும் இனி கூப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

நம்முடைய தமிழக வெற்றிக் கழக ஐடி விங் என்று சொன்னாலே, கண்ணியத்தோடு நடந்துகொள்பவர்கள் என்று எல்லாரும் சொல்ல வேண்டும். இந்த மாதிரி நீங்க நடந்துகொள்ள வேண்டும். கூடிய விரைவில் உங்களை நான் பார்க்க வருகிறேன். அதுவரைக்கும் உங்க எல்லாருக்கும் என்னுடைய ஆல் தி பெஸ்ட்.. வெற்றி நிச்சயம்" என்று அவர் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com