“மதத்துக்கு எதிரான வெறுப்புகளுக்கு நாம் இரையாகிவிடக்கூடாது” என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்:
“பெகல்காமிற்கு நானும் சுற்றுலாப் பயணியாக சென்றுள்ளேன். தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக என் இதயம் துடிக்கிறது. அதே போல இந்த நிகழ்விற்குப் பின் இன்னும் கூடுதல் கண்காணிப்பு, சோதனைக்கு உள்ளாக்கப்படவுள்ள காஷ்மீர் மக்களை நினைக்கையில் என் இதயம் உடைகிறது.
நாடு ஏற்கெனவே பிரிவினையை நோக்கி செல்லும் ஒரு இக்கட்டான தருணத்தில், இச்சம்பவத்தில் பரப்பப்படும் குறிப்பிட்ட மதம் / சமூகத்துக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்களுக்கு நாம் இரையாகிவிடாமல் இருக்க வேண்டும். குடிமக்களாக அதுவே நமது கடமை.
நான் என் கருத்தை அடிக்கடி சொல்பவள் அல்ல, ஆனால் இந்த சூழலில் இதை சொல்ல வேண்டும் என உணர்ந்தேன். இங்கே வெறுப்பிற்கு இடம் இல்லை, எனது பதிவின் பின்னூட்ட பகுதியிலும் இல்லை, நம் உலகிலும் இல்லை” என தெரிவித்துள்ளார்.