தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம், ஏற்க மாட்டோம்! – அமைச்சர் அன்பில் மகேஸ்

Minister Anbil Mahesh Poyyamozhi
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Published on

தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம், எதிர்ப்போம், ஏற்க மாட்டோம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:“9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் மத்திய அரசுக்கே பாடம் புகட்டும் விதமாக தேசிய கல்விக் கொள்கையின் அபாயத்தை எடுத்துரைத்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

அவர் கொடுத்த “மதயானை” எனும் தலைப்பையும், அவரின் வழிகாட்டுதலையும் எடுத்துக்கொண்டு, கழகத் தலைவர்-முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். எதிர்ப்போம். ஏற்க மாட்டோம்!” என அன்பில் மகேஸ் கூறியுள்ளார்

புதிய கல்விக் கொள்கை மாநிலங்களுக்குப் பொருந்துமா? என்ற தலைப்பில் 2016 இல் கருணாநிதி எழுதியிருந்த கட்டுரையை பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com