தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா? போலீஸ் ஆட்சியா?

அன்புமணி
அன்புமணி
Published on

தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா? போலீஸ் ஆட்சியா? என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: விழுப்புரம் மாவட்டம் அரசூர் கூட்டு சாலை என்ற இடத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், போலீசாரின் அத்துமீறலைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் இருவேல்பட்டு கிராம மக்கள் மீது போலீசார் கடுமையாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆண் போலீசார் அவமானப்படுத்தும் வகையில் இழுத்துச் சென்று அப்புறப்படுத்தியுள்ளனர். வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பாவி இளைஞர்களையும் போலீசார் பயங்கரவாதிகளை போல இழுத்துக் கொண்டு சென்றுள்ளனர். இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்துவதில் கூட தவறு இல்லை. ஆனால், கலைந்து சென்ற மக்களை பயங்கரவாதிகளைப் பிடிப்பதைப் போல போலீசார் வேட்டையாடியதை மன்னிக்க முடியாது. தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தியவர்கள் மக்கள் தான். இத்தகைய நிகழ்வுகளைப் பார்க்கும் போது தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா, போலீஸ் ஆட்சியா? என்ற ஐயம் தான் எழுகிறது. இவற்றுக்கெல்லாம் மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை. இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com