‘திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை..!’

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல, சில உள்ளங்களைத்தான் என கீழடி அறிக்கையை ஏற்க மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

கீழடியில் ஆய்வு நடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணா அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன் அறிக்கை சமர்ப்பித்திருந்த நிலையில், மத்திய அரசு அந்த அறிக்கையை ஏற்க மறுத்து கூடுதல் விவரங்களை கேட்டு திருத்த அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட மறுக்கும் மத்திய பாஜக அரசின் தமிழர் விரோத போக்கை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் நாளை காலை 10 மணி அளவில் மதுரை வீரகனூர் சுற்றுச்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம்!

இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை! நாளை மதுரை வீரகனூரில் திமுக மாணவரணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி மத்திய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம்! அவர்களைத் திருத்துவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com