டிரம்ப் தொடங்கி வர்த்தக போர்… முடிவுக்கு வந்தது எப்படி?

டிரம்ப் தொடங்கி வர்த்தக போர்…  முடிவுக்கு வந்தது எப்படி?
Published on

வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலும், 90 நாட்களுக்கு பரஸ்பர வரிகளை அமெரிக்கா, சீனா ஆகிய இருநாடுகளும் திரும்ப பெற ஒப்புக்கொண்டன. அதேநேரத்தில் பரஸ்பர வரிகளை குறைக்கவும் இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளது.

உலக பொருளாதாரத்தையே அச்சுறுத்திய வர்த்தகப்போரை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி வைத்தார். மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான வரியை உயர்த்தி அதிரடி காட்டினார். அவருக்கு சவால் விடும் வகையில் சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை உயர்த்தியது.

இந்த நிலையில், அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளன. இவ்விரு நாடுகளுக்குமிடையில் ஏற்பட்டுள்ள உடன்படிக்கையின்படி, சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி 145 சதவீதம் என்ற அளவிலிருந்து 30 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பு மே 14ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

அதேபோல, சீன அரசு அமெரிக்க பொருள்களுக்கு விதித்திருந்த 125 சதவீத வரியை 10 சதவீதமாகக் குறைத்து அறிவிக்க உள்ளது.

அமெரிக்கா - சீனா வா்த்தக மோதலுக்கு தீா்வு காணும் நோக்கில் ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான ஸ்விட்சா்லாந்து நாட்டு தூதரகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com