‘அண்ணாசாலையில் எங்கே வரவேண்டும்!’ – அண்ணாமலை ரெடி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
Published on

அண்ணாசாலையில் எங்கு வரவேண்டும் என திமுகவினர் கூறினால், அங்குத் தனி ஆளாக வருகிறேன் என அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையேயான வார்த்தை மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. கெட் அவுட் மோடி என துணை முதலமைச்சர் உதயநிதி பேசியதற்கு, "நீ சரியான (உதயநிதி) ஆளாக இருந்தால் ‘கெட் அவுட் மோடி’ என்று சொல்ல முடியுமா? நீ சொலிப்பாரு...” என நேற்று அண்ணாமலை விமர்சித்திருந்தார்.

இதற்கு இன்று பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்கள்’ என்றார்.

இந்த நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: “தரமில்லாமல் பேசினால், தரமில்லாத பதில்தான் வரும். பிரதமரையும் நிதி அமைச்சரையும் மரியாதை இல்லாமல் பேசினால், இதான் நடக்கும். நேற்று நான் பேசியது டிரெய்லர்தான்.

நான் சென்னைக்கு அடுத்த வாரம் வருகிறேன். அண்ணாசாலையில் எங்கு வரவேண்டும் என தேதியையும் இடத்தையும் திமுகவினர் குறிக்கட்டும். தனி ஆளாக வருகிறேன். நீங்கள் என்னைத் தடுத்து நிறுத்திப்பாருங்கள். நான் சொன்ன கருத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை.

இன்று முழுவதும் திமுக ஐ.டி.விங்கை சேர்ந்தவர்கள் கெட் அவுட் மோடி என்று ட்விட் பண்ணட்டும். நான் நாளை காலை 6 மணிக்கு கெட் அவுட் ஸ்டாலின் என்று ட்விட் பண்றேன். அது எந்தளவுக்கு போகிறதென்று பார்ப்போம். நாளை மறுநாள் காலையில் இந்த பஞ்சாயத்தை முடித்துக் கொள்வோம்.

logo
Andhimazhai
www.andhimazhai.com