பிரதமர் விழாவில் பங்கேற்காதது ஏன்? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

உதகை விழாவில் பங்கேற்பதால் பாம்பனில் பிரதமர் பங்கேற்கும் விழாவிற்கு செல்லவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

ஊட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

திமுக ஆட்சியில், நீலகிரியின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. பழங்குடியின மக்கள் வாழும் அனைத்து பகுதிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கூடலூர் பகுதியில் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களின் ஆதரவோடு வளர்ச்சியை நோக்கி திராவிட மாடல் ஆட்சி.இந்தியாவில் பட்டினி சாவு இல்லாத மாநிலம் என நிரூபித்துள்ளோம்.நாட்டிலேயே தமிழ்நாடு அதிக வளர்ச்சியை எட்டியுள்ளது.

இந்தியாவில் பட்டினிச் சாவு இல்லாத மாநிலம் என நிரூபித்துள்ளோம். வாகனங்கள் செல்லாத பகுதிகளில் கூட, மக்களை தேடி மருத்துவம். வனவிலங்கு தாக்கி இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். கூடலூரில் ரூ.26 கோடியில் 300 வீடுகள் கட்டித் தரப்படும்.10 கோடி ரூபாயில் பழங்குடியின அருங்காட்சியகம் அமைக்கப்படும்.மல்டி லெவல் கார் பார்கிங் அமைத்து தரப்படும். ஊட்டியில் 10 பேருந்துகள் மூலம் சுற்றுலா பேருந்துகள் சேவை தொடங்கப்படும்.நீலகிரி நடுகாணியில் ரூ.3 கோடியில் சூழலியல் மையம் அமைக்கப்படும்.

மக்களின் ஆதரவுடன் வளர்ச்சியை நோக்கி கம்பீரமாக திராவிட மாடல் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம். தேயிலை தோட்டக்கழகம் உருவாக்கம் உள்ளிட்ட திட்டங்கள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டன. கடந்த ஆட்சியில் உதகை மருத்துவமனைக்கான எந்த பணிகளும் நடக்கவில்லை. எடை குறைவான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து திட்டத்தை உதகையில் தொடங்கி வைத்தேன். தூக்கத்தில் இருந்த ஆட்சியாளரளை எழுப்பி நீலகிரிக்கு வரவைத்ததும் திமுகதான். 2019-ல் உதகையில் நிலச்சரிவு ஏற்பட்டபோது நான் இங்கேயே 2 நாட்கள் முகாமிட்டிருந்தேன். திமுக குரல் கொடுத்தபிறகுதான் அப்போதைய முதலமைச்சர் ஹெலிகாப்டரில் வந்து பார்வையிட்டார். பொருளாதார வளர்ச்சியில் டாப் கியரில் செல்லும் தமிழ்நாடு. பட்டினிச்சாவே இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியிருக்கிறோம். இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் மட்டும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி கண்ட மாநிலம் தமிழ்நாடு என நாளிதழில் செய்தி வந்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி நாளிதழில் செய்தி வந்துள்ளது. அதிக வளர்ச்சி கண்ட மாநிலமாக 9.69 சதவீதம் வளர்ச்சியுடன் தமிழ்நாடு உள்ளதாக புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடி அவர்களே.. தமிழ்நாட்டு மண்ணில் நின்று இந்த உறுதிமொழியை அளிக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் பிரதமர் உறுதியளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் எந்த வகையிலும் தொகுதிகள் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள நியாயமான அச்சத்தை பிரதமர் மோடி போக்க வேண்டும். உதகையில் விழாவில் பங்கேற்றுள்ளதால் பாம்பனில் நடக்கும் விழாவில் பங்கேற்க முடியவில்லை.இதை நான் பிரதமர் மோடியிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டேன். பிரதமர் விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com