இந்தியா, மராத்தியா என்கிற சர்ச்சைக்கு நடுவே இந்தியில் பேச மறுத்துள்ளார் நடிகை கஜோல்.
மகாராஷ்டிரா மாநில திரைப்பட விருதுகள்-2025 விழா மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாலிவுட் நடிகை கஜோல் கலந்துகொண்டார். இந்திய சினிமாவுக்கு நடிகை கஜோல் செய்த பங்களிப்புக்காக மதிப்புமிக்க ராஜ் கபூர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. விருது பெற்றப் பிறகு நடிகை கஜோல் மராத்தி மொழியில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதும், ஆங்கிலம் கலந்த மராத்தி மொழியில் பேசினார்
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கஜோல், மராத்தியிலும் ஆங்கிலத்திலும் பதிலளித்து வந்தார். அப்போது, செய்தியாளர், ‘இந்தியில் பேசுங்கள்’ என்றார்.
அதற்கு கஜோல், “ஏன் இந்தியில் பேச வேண்டும்? புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் போதும்” எனக் கோபமாகப் பதிலளித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக இந்தி மற்றும் மராத்தி மொழிகளுக்கு இடையே நிகழும் சர்ச்சையால் கஜோலின் இப்பதில் காரசார விவாதமாக மாறியுள்ளது.