விஜய் கட்சியின் கூட்டணி ஏன்? - தமிழ்நாடு முஸ்லீம் தலைவர் பேட்டி

தவெகவுடன் கூட்டணி அமைத்த தமிழநாடு முஸ்லீம் லீக்
தவெகவுடன் கூட்டணி அமைத்த தமிழநாடு முஸ்லீம் லீக்
Published on

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தமிழக வெற்றிக்கழகம் தொடங்கியுள்ளது.

தமிழக வெற்றிக்கழகம் ஆரம்பித்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. விஜய் அரசியலில் அடியெடுத்து வைக்கும்போதே நாம் சந்திக்கும் தேர்தல் 2026 சட்டமன்றத் தேர்தல்தான். அதிலும் ஆட்சியை பிடிக்க அயராது பாடவேண்டும் எனவும் தெளிவாக கூறிவிட்டார்.

கட்சி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டே, நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி போட்டியிடவில்லை. அதேபோன்று, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவால் காலியான ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் அக்கட்சி போட்டியிடவில்லை.

இந்த ஓராண்டில் அதற்கான அடித்தளத்தை அமைத்து வேலை செய்ய ஆரம்பித்து விட்டது தவெக.

அந்தவகையில், தற்போது தவெக தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியுடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் முஸ்லீம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் முஸ்தபா தனது கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டார்.

இந்த சந்திப்புக்குப்பின், தமிழநாடு முஸ்லீம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் முஸ்தபா கூறியதாவது: “அற்பச்செயல்களில் ஈடுபடுவதை திமுக நிறுத்திக்கொள்வது நல்லது. தவெகவுக்கு எதிராக இஸ்லாமியர்களை திசை திருப்பும் திமுகவின் சித்து விளையாட்டு எடுபடாது. சிஏஏ சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என கூறி இஸ்லாமியர்களின் பக்கம் நின்றவர் விஜய். தவெகவில் இஸ்லாமியர்களுக்கு அங்கீகாரம் அளித்து வருகிறார் விஜய். மாநில கட்சி மட்டுமல்ல தேசிய கட்சிகளில் கூட இஸ்லாமியர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பது கிடையாது.

வாக்கு வங்கிக்காக சிலர் மூலம் இஸ்லாமியர்களை திசை திருப்ப திமுக சதி செய்கிறது. இஸ்லாமியர்களுக்கு தவெக அங்கீகாரம் கொடுக்கவில்லை என பொய் செய்தியை பரப்பி வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com