செய்திகள்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை கோயம்பேடு, அரும்பாக்கம், அமைந்தகரை, புரசைவாக்கம், அண்ணாநகர், முகப்பேர், வளசரவாக்கம், போரூர் உள்ளிட்டப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதேபோன்று புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், மதுரவாயல், பூவிருந்தவல்லி, திருவேற்காடு உள்ளிட்டப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதேபோன்று, அச்சரப்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், ஆகஸ்ட் 12 முதல் 15 ஆம் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.