‘குலத்தொழிலா…? கொளுத்தி எடுக்கிறேன் பாரு’ – சீமான் ஆவேசம்!

NTK Seeman
நாதக சீமான்
Published on

தமிழகத்தின் தேசிய மரம் பனைமரம், அது எப்படி ஒரு ஜாதியின் மரமாக மாறியது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது:

“கள்ளுக்கடையை திறந்தால் டாஸ்மாக் வியாபாரம் பாதிக்கும் என்பதால் கள்ளுக்கடையை மூடுகிறார்கள். கள்ளுக்கடையைத் திறந்தால் டாஸ்மாக்கில் வியாபாரம் படுத்துவிடும். இதனை தவிர வேறு ஏதும் காரணம் இருக்கா சொல்லுங்க?” என்று ஆவேசமாகப் பேசிய சீமான். தொடர்ந்து பேசியதாவது.

”தமிழகத்தின் தேசிய மரமான பனை மரம் எப்படி ஜாதி மரம் ஆகியது.? ஜல்லிக்கட்டுக்குப் போராடினால் அது ஜாதி விளையாட்டு. இதெல்லாம் சேட்டை தானே.

நான் பனைமரம் ஏறியது குலத்தொழிலாகி விடுகிறது. மீனு திங்கணும், கருவாடு திங்கணும், வெண்ணெய், நெய் எல்லாம் திங்கணும் என் வெண்ணெய்களுக்கு… ஆடு மாடு மேய்ப்பது குலத்தொழிலாகிடுமா…? கொளுத்தி எடுக்கிறேன் பாரு உங்களை… சேட்டை பண்ணிட்டு அலையுறீங்களா…?

புதுச்சேரியில் கள் விற்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் அது போதைப்பொருளானது எப்படி? நான் பனை மரம் ஏறியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தால் விசாரணையை எதிர்கொள்ளத் தயார்.” என்றார்.

கடந்த ஜூன் 15ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழை அருகே பனைமரத்தில் ஏறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கினார். இதைத் தொடர்ந்து கள் குடிப்பது உடம்பு நல்லதா கெட்டதா என்ற விவாதம் இணையத்தில் சூடுபிடித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com