கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியாகவில்லை என்றால், குறைந்தபட்சம் 30 கோடி ரூபாய் இழப்பு ஏற்படலாம் என்கிறனர் சினிமா வட்டாரத்தினர்.
விக்ரம் படத்துக்குப் பிறகு அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் மாறியிருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடகாவில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளன.
கர்நாடகா உயர்நீதிமன்றம் கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்டால், இந்த பிரச்னை முடிந்து விடுமே என அழுத்தம் கொடுத்த நிலையிலும், கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துள்ளார். படத்தின் தயாரிப்பாளராக இருந்த போதும், கமல்ஹாசன் இறங்கி வராமல் தனது நிலையில் நிற்பதன் காரணமாக அவருக்கு தமிழ்நாட்டில் ஆதரவு பெருகி வருகிறது.
இந்த நிலையில், தக் லைஃப் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியாகவில்லை என்றால் ரூ. 35 கோடியிலிருந்து 40 கோடி வரை இழைப்பு என்கிறனர் கர்நாடக திரைப்பட விநியோகஸ்தர்கள். இதனால், திரையரங்க உரிமையாளர்களுக்கு பெரும் இழப்பு என்கின்றனர்.
கர்நாடகாவில் கமல்ஹாசன் திரைப்படங்களிலேயே விக்ரம் திரைப்படம் தான் அதிகபட்சமாக 22.10 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது.