பெற்ற மகளையே... காதலனுடன் பா.ஜ.க. பெண் நிர்வாகி கைது!

பெற்ற மகளையே... காதலனுடன் பா.ஜ.க. பெண் நிர்வாகி கைது!
Published on

தனது சொந்த மகளைக் காதலனைக் கொண்டு பாலியல் வன்கொடுமை செய்யச் சொன்ன பா.ஜ.க பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியானா மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்தவர் அனமிகா சர்மா. பா.ஜ.க மகளிர் அணி நிர்வாகியான இவர் தனது கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் அனமிகாவுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், அனமிகாவுக்கு சுமித் பட்வால் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அது அவர்களுக்குள் காதலாக மாறியுள்ளது. சுமித் பட்வால் அனமிகாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்படி வரும் போது அவரின் 13 வயது மகள் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இது அனமிகாவுக்கும் தெரிய வந்ததுள்ளது. இதையடுத்து அவரே தனது மகளைக் காதலனைக் கொண்டு பாலியல் வன்கொடுமை செய்யச் சொல்லியதாக கூறப்படுகிறது.

தனது காதலன் மட்டும் இல்லாமல் வேறு சில ஆண்களையும், தனது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ய அனமிகா சொல்லியிருக்கிறார். இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது தந்தையிடம் தெரிவித்தார்.

உடனே அப்பெண்ணை அவரது தந்தை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து அனமிகாவையும் சுமித் பட்வாலையும் நேற்று கைது செய்தனர். அவர்கள் மீது போக்சா வழக்கு பாய்ந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு, அனமிகா இப்போது பாஜகவில் எந்தவித பொறுப்பிலும் இல்லை என்று கூறப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com