சென்னையில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு காஞ்சிபுரம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பெற்றோர் நினைப்பதாகவும், இதுபற்றி கல்லூரி மாணவிகள் தன்னிடம் கூறியதாகவும் பேசியிருந்தார்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன் ஆளுநர் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: “ஆளுநர் தெரியாமல் சொல்கிறார். அல்லது தெரிந்தும் தெரியாமல் சொல்கிறார். பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அவருக்குத் தெரியும். சென்னை பாதுகாப்பான இடம்தான். பிற மாநிலங்களில் நடக்கும் தகவல் வெளியே தெரிவதில்லை. அல்லது மறைக்கப்படுகிறது. இங்கு ஊடகங்கள் ஜனநாயக முறையில் இருப்பதால் எல்லா செய்திகளும் வெளியே வருகின்றன.” என்றார்.