காசாவில் இளம் எழுத்தாளர் ஹெபா படுகொலை!

பாலஸ்தீன எழுத்தாளர் ஹெபா அபு நடா
பாலஸ்தீன எழுத்தாளர் ஹெபா அபு நடா
Published on

காசா பகுதியில் வசித்துவந்த பாலஸ்தீனக் கவிஞர் ஹெபா அபு நடா இஸ்ரேல் படைகளின் குண்டுவீச்சால் படுகொலை செய்யப்பட்டார்.

பாலஸ்தீன பண்பாட்டு அமைச்சகம் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. 

உள்ளூர் காலப்படி வெள்ளியன்று தெற்கு காசாவில் உள்ள கான்யூனிஸ் நகரில் உள்ள தன் வீட்டில் இருந்த கவிஞர் ஹெபா குண்டுவீச்சுக்கு இலக்காகி கொல்லப்பட்டார். அவருக்கு வயது 32. 

கதைகள், கவிதைகள், நாவல்கள் என எழுதிவந்த பாலஸ்தீனத்தின் சம கால முக்கிய பெண் எழுத்தாளர், ஹெபா. 

சவுதியின் மெக்காவில் அகதி முகாமில் பிறந்த இவர், காசா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் இளநிலை உயிர்வேதியியல், அல் அகர் பல்கலைக்கழகத்தில் மருத்துவ உணவியல் முதுநிலை பட்டங்களைப் படித்தவர். உணவியலாளராகப் பணியாற்றிக்கொண்டே எழுத்திலும் விடாமல் செயலாற்றி வந்தார் ஹெபா.

’இறந்துபோகிறவர்களுக்கு ஆக்சிஜன் இல்லை’ என்கிற இவரின் நாவல், 2017ஆம் ஆண்டில் சார்ஜா இலக்கிய விருதில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

தான் இறப்பதற்கு சில மணி நேரம் முன்னர் அவர் தன் முகநூலில் நாட்டு நிலவரத்தைப் பற்றி எழுதியது, படிப்போரை நெகிழ்ச்சி அடையச் செய்வதாக உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com