நேபாளம் - 1,252 உடல்கள் மீட்பு, 4,875 பேரைக் காணவில்லை!

நேபாள வெள்ளம்
நேபாள வெள்ளம்
Published on

நேபாளத்தில் ஏற்பட்ட பனி மலை உடைவு பேரழிவு வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,252ஆக அதிகரித்துள்ளது. இன்று காலைவரையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று ஏற்பட்ட பேரழிவுப் பெருவெள்ளத்தில் சிக்கியவர்கள், உடைமைகள் மீட்புப் பணி ஒன்பதாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.

ஆயிரக்கணக்கானவர்கள் இன்னும் காணவில்லை என்று அந்நாட்டுக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

நேபாளக் காவல்துறை அறிவிப்பின்படி, சிதவான் மாவட்டத்தில் 355 சடலங்களும், கிழக்கு நவல்பரசி மாவட்டத்தில் 218 சடலங்களும், மேற்கு நவல்பரசி மாவட்டத்தில் 208 சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இதில் இந்தியப் பகுதியில் மீட்கப்பட்ட 18 சடலங்கள் மேற்கு நவல்பரசி மாவட்டத்தில் ஒப்படைக்கப்பட்டன.

நுவாகோட்டில் 177 பேரின் உடல்களும், இரசுவா மாவட்டத்தில் 127 பேரின் சடலங்களும், கோர்க்காவில் 69 சடலங்களும் தாடிங்கில் 60 சடலங்களும், தகனு மாவட்டத்தில் 38 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

நேபாள இராணுவத்தின் கூட்டு மீட்புக் குழுக்களின் தலைமையில் தேடுதல், மீட்புப் பணி தொடர்ந்துவருகிறது.

காணாமல் போனவர்கள் 4,875 பேர் எனக் கூறப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com