ஜப்பான் நிலநடுக்கத்தில் 13 பேர் பலி... உடல்கள் மீட்பு!

Japan earthquake
ஜப்பான் நிலநடுக்கம்
Published on

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், இதுவரை 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.மேலும், காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஜப்பானின் கியூஷூவில் உள்ள குமாமோட்டோ பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

காஷிமா நகரில் உள்ள வணிக வளாகத்தின் 2ஆவது தளம் இடிந்து விழுந்ததில், ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கினர்.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, குமாமோட்டோ,அதனைச் சுற்றியுள்ள மாகணங்களின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர், 2 மணி நேரத்தில் இந்த சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

நிலநடுக்கத்திற்குப் பிறகு இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு தண்ணீர், உணவு, பிற அத்தியாவசியப் பொருட்கள் விநியோகப்பட்டு வருவதாக ஜப்பானியப் பிரதமர் சனே தகைச்சி கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதி டோக்கியோவிலிருந்து தென்மேற்கே 900 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

கடந்த 2026ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு, இன்னும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுவரும் முக்கிய சுற்றுலாத் தலமான குமாமோட்டோ கோட்டையின் கல் சுவர்கள், தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்திலும் சேதமடைந்துள்ளதாக கியோடா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com