1400 வருட வரலாற்றில் திருப்பம்- ஆங்கிலிக்கன் திருச்சபை பேராயர் பெண்!

ஆங்கிலிக்கன் திருச்சபை முதல் பெண் பேராயர் சாரா முல்லாலி
ஆங்கிலிக்கன் திருச்சபை முதல் பெண் பேராயர் சாரா முல்லாலி
Published on

பிரிட்டனில் உள்ள கேண்டர்பரியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆங்கிலிக்கன் திருச்சபையில் முதல் முறையாக பெண் ஒருவரைப் பேராயராக ஆக்கியுள்ளனர். 

இங்கிலாந்தின் தலைமைச் செவிலியராகப் பணியாற்றிய 63 வயது சாரா முல்லாலி, நேற்று இந்தத் திருச்சபையின் பேராயராக அறிவிக்கப்பட்டார்.

ஆயிரத்து 400 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட இந்தத் திருச்சபையில், இவர்தான் முதல் பெண் தலைமை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனில் ஆண்களின் கையே ஓங்கியிருக்கும் சில இடங்களில் ஒன்றான திருச்சபைத் தலைமையில் பெண் வந்திருப்பதற்கு, உள்நாட்டில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதேசமயம், ஆங்கிலிக்கன் திருச்சபை செயல்படும் ஆப்பிரிக்க நாடுகளில் இதற்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை.

நைஜீரியா, ருவாண்டா ஆகிய நாடுகளின் ஆங்கிலிக்கன் சபையினர் பகிரங்கமாகவே அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com