ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியான கென்யாவில் பெய்த கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டு அந்நாட்டின் பல பகுதிகளை மூழ்கடித்துள்ளது. இதில், 170 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் நைரோபி உட்பட பல நகரங்கள் நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
நைரோபியின் பழமையான கிஜாப் அணையில் அதன் தடுப்புச்சுவர் இடிந்தது. பக்கத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் வெள்ளம் புகுந்தது. ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன.
வெள்ளப் பெருக்கில் மட்டுமின்றி கட்டிட இடிபாடிகளிலும் சிக்கி அதிகமானோர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் இடங்களில், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபட்டதால் மக்கள் கடுமையாக அவதிக்குள்ளாகினர்.