ரசியாவின் பெல்கோரோட் மாநிலத்தில் டிரோன் தாக்குதல்
ரசியாவின் பெல்கோரோட் மாநிலத்தில் டிரோன் தாக்குதல்

உக்ரைன் டிரோன் தாக்குதல் - ரஷ்யாவில் 2 பேர் பலி!

உக்ரைன் படையினர் நடத்திய டிரோன் தாக்குதலில் ரசியாவின் பெல்கோரோட் மாநிலத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று அந்த மாநிலத்தின் ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாஸ்கோ தெரிவித்துள்ளார்.

போரோஸ் எனும் கிராமத்தில் தனியார் குடியிருப்பு ஒன்றும் தானியக் களஞ்சியம் ஒன்றும் முற்றிலும் எரிந்து நாசமாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ரசியாவில் எரிந்து நாசமான வீடு
ரசியாவில் எரிந்து நாசமான வீடு

இதில் இரண்டு பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டுள்ளனர். எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவரும் அவரைக் கவனித்துவந்தவருமே கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் கிளாட்கோவ் தெரிவித்தார்.

கொல்லப்பட்டவரின் மகன் அந்த நேரத்தில் அங்கு இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் என்றும் கிளாட்ஸ்கோவ் தன் டெலிகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ரசியாவின் மேற்கில் உள்ள குர்ஸ்க், கலுகா, பிரையன்ஸ்க் ஆகிய மாநிலங்களின் ஆளுநர்களும் தங்கள் பகுதிகளிலும் உக்ரைனின் டிரோன்கள் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

உக்ரைனின் 50-க்கும் மேற்பட்ட டிரோன்களை இடைமறித்துத் தாக்கியதாகவும் அவற்றில் 26 டிரோன்கள் பெல்கோரோட் வட்டாரத்திலும் மாஸ்கோவைச் சுற்றிய பகுதியில் ஒன்றும் விழுந்ததாக ரசியாவின் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் பகிரங்க இராணுவ உதவியின் மூலம் ரசியாவின் மீது உக்ரைன் பதில் தாக்குதலும் வலிந்த தாக்குதலும் மேற்கொண்டுவருகிறது. சில வாரங்களாகவே உக்ரைனின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com