மலேசியாவில் விபத்துக்கு உள்ளாகி விழுந்த ஹெலிகாப்டர்
மலேசியாவில் விபத்துக்கு உள்ளாகி விழுந்த ஹெலிகாப்டர்

2 ஹெலிகாப்டர்கள் மோதி கோர விபத்து- 10 பேர் பலி!

மலேசிய நாட்டில் இரண்டு ஹெலிகாப்டர்கள் பயிற்சியின்போது மோதிக்கொண்டதில் கீழே விழுந்தன. அவற்றில் இருந்த பத்து பேரும் உயிரிழந்துவிட்டதாகத் தகவல்கள் வந்துள்ளன.

அந்நாட்டின் பேராக் மாநிலம் லுமுட் என்கிற சிறிய நகரில் உள்ள கடற்படைத் தளத்துக்கு அருகில் இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்தது.

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மலேசியாவின் 90ஆவது கடற்படை நாள் நிகழ்வுகளை முன்னிட்டு, இரண்டு ஹெலிகாப்டர்களும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. ஒன்றில் மூன்று பேரும் மற்றதில் ஏழு பேரும் இருந்துள்ளனர்.

பயிற்சியின்போது ஒரு ஹெலிகாப்டரின் இறக்கையுடன் மற்ற ஹெலிகாப்டர் மோத, இரண்டுமே நிலைதடுமாறி கீழ்நோக்கி வேகமாகப் பாய்ந்தன. ஒன்று கடற்படை அரங்கத்தின் நீச்சல்குளத்துக்கு அருகிலும் இன்னொன்று அரங்கத்தின் படிக்கட்டுப் பகுதியிலும் விழுந்தன.

சாகசப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவரும் உயிர்பிழைக்கவில்லை. அனைவரின் சடலங்களும் லுமுட் கடற்படை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டன.

விபத்தில் உயிரிழந்தவர்கள் தம் துயரத்திலிருந்து விடுபட்டுவர இறைவனை வேண்டுவதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com