ஒளிமரபணுவியல்... 3 பேருக்கு மருத்துவ நோபல் பரிசு!

Nobel Prize for Medicine
மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுபவர்கள்
Published on: 

நடப்பு ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த கார்ல் டீசெரோத், ஜெர்மனியை சேர்ந்த பீட்டர் ஹெகெமன், ஜார்ஜ் நாகேல் ஆகியோர் 2026 மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக நோபல் பரிசு கமிட்டி அறிவித்துள்ளது.

ஒளி கட்டுப்பாட்டு அயனி சேனல்கள், ஒளிமரபணுவியல் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

பீட்டர் ஹெகெமன், ஜார்ஜ் நாகேல் ஆகிய இருவரும் சேனல்ரோடோப்பசின் என்ற புரதத்தின் சிறப்பு குணங்களைக் கண்டுபிடித்தார்கள். இந்தப் புரதத்தை எந்த உயிரணுவில் செலுத்தினாலும், அது ஒளியால் தூண்டப்பட்டு செயல்படுவதை இவர்கள் கண்டறிந்தார்கள்.

அமெரிக்காவின் ஸ்டான்போஃர்ட் பல்கலைகழகத்தைச் சேர்ந்த கார்ல் டீசெரோத், இந்தப் புரதத்தை எலியின் உடலில் உள்ள செல்களில் செலுத்தியபோது, அதன் நரம்பணுக்கள் குறிப்பலைகளை அனுப்பியது.

ஒளியின் தூண்டுதலால், நம் உடலில் உள்ள செல்களையும், மூளையையும் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்ய வைக்க முடியும் என்ற ஒளிமரபணுவியல் கண்டுபிடிப்பிற்காக நடப்பு ஆண்டில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அளிக்கப்படுகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com