நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிப்பின் முக்கிய கட்டமாக, இன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
துருக்கியைச் சேர்ந்த டேரன் அசமோக்லு (மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கேம்பிரிட்ஜ், அமெரிக்கா),
பிரிட்டனைச் சேர்ந்த சைமன் ஜான்சன் (மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கேம்பிரிட்ஜ், அமெரிக்கா),
அமெரிக்காவின் ஜேம்ஸ் ஏ. ராபின்சன்,(சிகாகோ பல்கலைக்கழகம்) ஆகிய மூவருக்கும் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
"நாடுகளுக்கு இடையில் வருமான வித்தியாத்தைக் குறைப்பது சமகாலத்தின் மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. இந்த ஆண்டு நோபல் பரிசைப் பெறுகிறவர்கள் இதைச் சாதிப்பதற்கான நிறுவனங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளனர்.” என்று பொருளாதார அறிவியல் நோபல் பரிசுத் தேர்வுக் குழுவின் தலைவர் ஜேகோப் ஸ்வென்சன் குறிப்பிட்டுள்ளார்.