ஆபீஸுக்கு சீக்கிரம் வந்ததால் வேலை இழந்த பெண்!

ஆபீஸுக்கு சீக்கிரம் வந்ததால் வேலை  இழந்த பெண்!
Published on

ஆபீஸுக்கு லேட்டா வந்து வாங்கிக் கட்டிக் கொள்வதுதான் நம்முடைய வழக்கம். ஆனால், இளம் பெண் ஒருவர் ஆபீஸுக்கு தினமும் சீக்கிரம் வந்ததால் அவரை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது நிறுவனம் ஒன்று.

ஆமாங்க...

ஸ்பெயினில் உள்ள ஓர் ஆபீஸில் வேலைப் பார்த்து வந்ததுள்ளார் 22 வயதான இளம் பெண் ஒருவர். ஆபிஸ் டைம் காலை 7.30 மணி தான் என்றாலும், இவரோ 6.45 அல்லது 7 மணிக்கே அட்டனன்ஸ் போட்டுவிடுவாராம்.

இவ்வளவு சீக்கிரம் அலுவலகம் வருவதை நிறுத்துமாறு, நிறுவன மேலதிகாரி எச்சரித்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டிலேயே பெண்ணை அவர் எச்சரித்துள்ளார். இருப்பினும், அதற்குப் பின்னும் அவர் 19 முறை சீக்கிரமே ஆபீஸுக்கு வந்துள்ளார்.

மேலதிகாரியின் அறிவுறுத்தலை இப்படி தொடர்ந்து மீறிவந்த அந்த பெண்ணை வேலையை விட்டு தூக்கியுள்ளது அந்த நிறுவனம். இதனால் அந்த பெண் நீதிமன்ற படியேறியுள்ளார்.

வழக்கு விசாரணையின்போது, சில சமயங்களில் அலுவலகத்துக்கு வருவதற்கு முன்னதாகவே, அவர் நிறுவனத்தின் செயலி வழியாக வந்ததாகப் பதிவிட்டு முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் நிறுவனத்தின் தரப்பில் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, நிறுவனத்தின் கார் பேட்டரியை அனுமதியின்றி விற்றதாகவும் பெண் மீது நிறுவனம் குற்றம் சாட்டியது.

இதனையடுத்து, ஸ்பெயின் நாட்டின் தொழிலாளர் சட்டத்தின் 54 ஆவது பிரிவின்படி, பணியிட விதிகளைப் பின்பற்ற மறுப்பது கடுமையான மீறல் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை அந்த பெண் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் செய்வாரா என்று தெரியவில்லை.

logo
Andhimazhai
www.andhimazhai.com