எனக்கு 8 முறை அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும் - டிரம்ப்

American president Trumph
அமெரிக்க அதிபர் டிரம்ப்
Published on: 

அமைதிக்கான நோபல் பரிசை நான் 8 முறை பெற்றிருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து கூறியுள்ளார்.

நடப்பு ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, தென்னாப்பிரிக்காவில் பிறந்த தமிழ் வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான் போர் உட்பட ஏராளானமான உலக நாடுகளுக்கு இடையிலான போர்களை தான் நிறுத்தியுள்ளதாகவும், அதற்காகத் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறிவருகிறார்.

இந்நிலையில், வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில்,

"அமெரிக்க மக்களின் அதிபராகிய எனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. இது நார்வே நாட்டிற்கும், நோபல் பரிசு கமிட்டிக்கும் ஏற்பட்ட அழிக்கமுடியாத கறை. இந்தப் பரிசு வழங்கப்படாததை அமெரிக்கா எப்போதும் மறக்காது.

ஐக்கிய நாடுகள் சபையில் யாரும் கேள்விப்பட்டிராத ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், வாழ்த்துகள்!

நான் தீர்த்துவைத்த ஒவ்வொரு போருக்கும், அமைதிக்கான நோபல் பரிசை நான் 8 முறை பெற்றிருக்க வேண்டும்." என்று டிரம்ப் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com