24 ஆண்டுகளுக்குப் பிறகு ரவுண்ட் ஆப் 16 சுற்றில் அமெரிக்கா!

America qualified to round of 16
ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்க அணி
Published on

உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் நாக்அவுட் சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற அமெரிக்கா, போஸ்னியா - ஹெர்சிகோவினா அணிகள் மோதின. இதில் 2-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா அணி வெற்றி பெற்றது.

24 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா அணி ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியது வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

மற்றொரு பரபரப்பான போட்டியில் பெல்ஜியம், செனகல் அணிகள் மோதின. பெல்ஜியம் அணி போட்டியின் முடிவில் 2 கோல்களுடன் பின்தங்கிய நிலையில் இருந்தது.

அதில் இருந்து மீண்டு, கூடுதல் நேரத்தில் செனகல் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு பெல்ஜியம் அணி தகுதி பெற்றது.

அடுத்ததாக இங்கிலாந்து அணி, டிஆர் காங்கோ அணிகள் மோதின. 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியது.

போட்டியின் 7ஆவது நிமிடத்திலேயே டிஆர் காங்கோ அணி கோல் அடித்து முன்னிலை பெற்றது. நீண்ட நேரம் கோல் அடிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்தை, கேப்டன் ஹாரி கேன் காப்பாற்றினார். அவர் 75, 86ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து அணிக்கு அபார வெற்றியைத் தேடித்தந்தார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி ரவுண்ட் ஆப் 16 சுற்றில் மெக்சிகோவை எதிர்கொள்ள உள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com