தென்கொரியாவில் நடந்த விமான விபத்தில் 85 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டின் தேசிய தீயணைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து ஜெரு ஏர் பிளைட் 2216 என்ற விமானம், 175 பயனிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் இன்று தென் கொரியாவுக்கு சென்ற நிலையில், முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி விமானம் விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் விமானத்தின் பின்பகுதி தீப்பற்றி எரிந்து பயங்கர புகை கிளம்பியது.
விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீ பற்றியது. மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 85 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விமானம் ஓடுபாதையில் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்தது தான் விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.