பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்: போராட்டக்காரர்கள் 6 பேர் பலி!

பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்: போராட்டக்காரர்கள் 6 பேர் பலி!
Published on

மதகுரு கமேனி கொல்லப்பட்டதற்கு எதர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டுப் படைத் தாக்குதல் நடத்தியதில், ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார். இதனை ஈரானும் உறுதிபடுத்தியுள்ளது.

இந்த நிலையில் மதகுரு கமேனி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது போராட்டக்காரர்கள் திடீரென அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தியதோடு உள்ளே சென்று தீ வைத்து வன்முறையிலும் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகினர்.

30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பின்னர் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றதாகவும், நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும் கராச்சி போலீஸார் தெரிவித்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com