நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா: இஸ்ரேல் அரசுக்கு எதிராக லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்!

இஸ்ரேல் அரசுக்கு எதிராக சாலைகளில் திரண்ட மக்கள்
இஸ்ரேல் அரசுக்கு எதிராக சாலைகளில் திரண்ட மக்கள்
Published on

இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைக்கும் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசைக் கண்டித்து 34வது வாரமாக கண்டனப் பேரணி நடைபெற்றது.

இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசு புதிய சட்ட மசோதாவை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொண்டு வந்தது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த மசோதாவை நிறுத்தி வைப்பதாக கடந்த மார்ச் மாதம் அந்நாட்டு அரசு அறிவித்தது. ஆனாலும் போராட்டம் தொடர்ந்தாலும், கடந்த மாதம் நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை என குற்றம்சாட்டி 34வது வாரமாக போராட்டம் நடைபெற்றது. தலைநகர் டெல் அவிவ்வில் சாலைகளில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள் இஸ்ரேல் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com