நான் தோற்றால் ரத்த களரி…டிரம்ப் மிரட்டல்!

நான் தோற்றால் ரத்த களரி…டிரம்ப் மிரட்டல்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் தோற்றால் ரத்த களரி ஏற்படும் என குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை செய்துள்ளார்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டிரம்ப் தொடங்கியுள்ளார். அந்த வகையில், ஓஹியோ மாகாணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய டொனால்டு டிட்ரம்ப், தன்னை அதிபராக தேர்வு செய்யாவிட்டால் ரத்தக்களறி ஏற்படும் என்று எச்சரித்தார்.

டொனால்டு டிரம்ப் பேசுகையில், "அமெரிக்கா வரலாற்றில் அதிபர் தேர்தல் மிகவும் முக்கியமான நாளாகும். தன்னை மீண்டும் அதிபராக தேர்வு செய்யவில்லை என்றால் ரத்த களரி ஏற்படும்" என்றார். அவரின் இந்த பேச்சு பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com