பயணிகள் ரயில், மாணவர் பேருந்து மோதல்- ஒருவர் பலி!

Bus collides with train
ரயிலில் மோதிய பேருந்து
Published on

உகாண்டா நாட்டில் மாணவர்கள் சென்ற சுற்றுலா பேருந்தும் பயணிகள் ரயிலும் மோதி விபத்து ஏற்பட்டது.

இன்று அதிகாலை 6 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.

கம்பாலா நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயிலில், கல்விச் சுற்றுலாவுக்காக 70 உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் ஜின்ஜா நகருக்கு பயணம் மேற்கொண்ட பேருந்து மோதியது.

இதில் பேருந்தில் பயணித்த ஆசிரியர் ஒருவர் உயிரிழந்ததுடன், மாணவர்கள் பலர் படுகாயமடைந்தனர்.

சாலைப் பாதுகாப்பு எச்சரிக்கைகளை மீறி ரயில் தண்டவாளத்தை வேகமாக கடக்க முயன்றதே இந்த விபத்திற்கான காரணமாகக் கூறப்படுகிறது.

ரயில்வே கிராசிங்கிலிருந்து 200 மீட்டர் தொலைவில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரி பேருந்தை நிறுத்த சைகை காட்டியதையும் மீறி ஓட்டுநர் பேருந்தை இயக்கியதாகத் தெரிகிறது.

இந்த விபத்தை நேரில் கண்ட ஒருவர், பேருந்தில் மாணவர்கள் அதிக இரைச்சலுடன் பாடிக் கொண்டிருந்ததால் ஓட்டுநருக்கு ரயிலின் எச்சரிக்கை ஒலி கேட்காமல்கூட இருந்திருக்கலாம் என்று கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com