பணியில் இருந்த 30 ஆண்டுகளில், ரூ.3,106 கோடி லஞ்சம் வாங்கிய முன்னாள் உயரதிகாரிக்கு மரண தண்டணை விதித்துள்ளது சீன நீதிமன்றம்.
சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில், கடந்த 1993 முதல் 2023 வரை பல்வேறு பதவிகளில் பணியாற்றிய யாங் யூலின், பண மோசடி, அதிகாரத்தை வரம்பு மீறி பயன்படுத்துதல் போன்ற பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது.
நான்ஜிங்கில் பொருளாதார - தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளில் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். அவருக்கு இப்போது 69 வயதாகிறது.
இவர் பணியில் இருந்தபோது அரசு வேலைகளை முடித்துத் தருவதாக்க கூறி ஏராளமான விலையுயர்ந்த பொருட்கள், பணத்தைப் பெற்றுள்ளதாக யாங் யூலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சீனாவின் சாங்ஜோ நகர நீதிமன்றம், இந்த நகரத்திற்கும், மக்களுக்கும் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறியது.
மேலும், தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டதால், அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.