5 மாதங்களில் ரூ.20,000 கோடி... சீனாவின் ரோபோ ஏற்றுமதி புது உச்சம்!

Chinese robot exports reached heights
புதிய உச்சத்தில் சீன ரோபோக்கள்
Published on

சீனாவின் ரோபோ தயாரிப்பு, விற்பனை, ஏற்றுமதி இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களிளேயே புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

ஜனவரி முதல் மே மாதம் வரை, சீனா 1.03 கோடிக்கும் அதிகமான ரோபோக்களை உற்பத்தி செய்து அசத்தியுள்ளது. இவற்றை உலகின் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மொத்த ஏற்றுமதி மதிப்பு ரூ.23,300 கோடி ஆகும்.

இந்த ஏற்றுமதியில் சுத்தம் செய்யும்  ரோபோக்கள் மட்டுமே 70% பங்கைக் கொண்டுள்ளன. அதேசமயம், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் தொழில்துறை ரோபோக்களின் ஏற்றுமதியும் உயர்ந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், ஆசிய நாடுகள்தான்  சீன ரோபோக்களுக்கான முக்கிய வாடிக்கையாளர்களாக உள்ளன.

சீனாவில் உள்ள ஷென்சென் மாகாணத்தில் இருந்து மட்டும் நாட்டின் மொத்த ரோபோ ஏற்றுமதியில் 25.5% பங்களிப்பு செய்யப்படுகிறது.

உலக அளவில் ஏராளமான துறைகளில் தானியங்கி ரோபோக்களின் தேவை அதிகரித்து வருவதே, சீனாவின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com