'கிளாட் சயின்ஸ்'... அறிவியலுக்கான புதிய ஏஐ ஆராய்ச்சி தளம்!

Claude science AI
கிளாட் சயின்ஸ்
Published on: 

ஏஐ நிறுவனமான ஆந்த்ரோபிக், அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்காக 'கிளாட் சயின்ஸ்' என்ற புதிய ஏஐ ஆராய்ச்சித் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சிக்கலான தரவுகளைப் பகுப்பாய்வு செய்வது, அதிக கணினி செயல்திறன் தேவைப்படும் ஆய்வுகளை மேற்கொள்வது, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை வேகப்படுத்துவது ஆகியவற்றில் இந்த தளம் உதவும் என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

60-க்கும் மேற்பட்ட அறிவியல் தளங்களை இந்த ஏஐ உதவியுடன் நேரடியாக அணுகலாம்.

இதன் முக்கியமான அம்சம் மல்டி-ஏஜென்ட் கட்டமைப்பு ஆகும். இதன் மூலம் ஆராய்ச்சியாளர்களின் கணக்குகள், ஆதாரங்களை சரிபார்த்து பிழைகளைக் கண்டறிந்து திருத்தும் திறனைப் பெற்றுள்ளது.

மேலும், ஆராய்ச்சியாளர்கள் ஒரே இடத்தில் இணைந்து பணியாற்றும் வகையில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்களுடனும், அதை அவர்கள் எளிதாக அணுகக்கூடிய வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மருத்துவம், உயிரியல், பிற அறிவியல் துறைகளில் ஏஐ பயன்பாடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய தளம், அறிவியல் ஆராய்ச்சிகளை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com