பேரிடர் மீட்பில் கரப்பான் பூச்சிகள்- ஆய்வில் நல்ல முடிவு!

cockroach with camera
கேமராவுடன் கரப்பான்பூச்சி
Published on

பேரிடர் மீட்புப் பணிகளில் உதவ கரப்பான் பூச்சியைப் பயன்படுத்தும் வழிமுறையை ஆஸ்திரேலியப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம், நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து, இந்த ஆய்வை நடத்தினர்.

குயின்ஸ்லாந்தில் 8.5 செ.மீ. வரை வளரக்கூடிய உலகின் அதிக எடை கொண்ட 'சைபோர்க்' கரப்பான்பூச்சியை இதற்காகப் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த வகையான கரப்பான் பூச்சியின் மீது, கேமரா, கடினமான இடங்களில் சிக்கியுள்ளவர்களுக்குத் தேவையான மருந்தை எடுத்துச்செல்லும் பை போன்றவை பொருத்தப்படுகின்றன.

மேலும், சிக்னல்களைச் சுமந்துசெல்லும் சிறிய எலக்ட்ரோடுகள் கரப்பான்பூச்சியின் உடலில் பொருத்தப்பட்டன.

மனிதர்கள் செல்லமுடியாத சிரமம் மிகுந்த இடங்களில், இதுபோன்ற கரப்பான்பூச்சியைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருந்தைக் கொடுத்து அனுப்பலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதனால், பாம்புக்கடி, அலர்ஜி போன்ற பாதிப்புகளுக்கு உடனடியாக மருந்துகளை எடுத்துச் சென்று பாதிப்படைந்தவரிடம் சேர்த்து, அவர்களின் உயிரைக் காக்க உதவும் என்று கூறப்படுகிறது.

மனிதர்களிடம் இந்த ஆய்வை மேற்கொள்ளவில்லை என்றாலும், பன்றித்தோல், சிலிக்கான் இலக்குகள் ஆகியவற்றில் இந்த சோதனை நடத்தப்பட்டதில், இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளது.

இதன்மூலம், பேரிடர்க் காலங்களில் கரப்பான் பூச்சிகளையும் மீட்புப் பணிகளில் பயன்படுத்தும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com