ஓடிச் சென்றதற்காகப் பணி நீக்கம்... விவாதத்தை கிளப்பிய வழக்கு!

ஓடிச் சென்றதற்காகப் பணி நீக்கம்... விவாதத்தை கிளப்பிய வழக்கு!
Published on

சீனாவின் ஜியாங்சுவில் நடந்த சம்பவம் ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது. நிறுவனத்துக்கும் ஊழியருக்கும் இடையே நடந்த வழக்குதான் அது...!

சீனாவின் ஜியாங்க் மாகாணத்தைச் சேர்ந்த சென் என்ற ஊழியர் ஒருவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முதுகு வலி காரணமாக ஒரு மாதம் மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார். அதற்குரிய மருத்துவச் சான்றிதழ்களையும் அவர் சமர்ப்பித்ததுள்ளார்.

உடல்நலம் தேறி பணிக்குத் திரும்பிய அவர், சில நாள்களிலேயே மீண்டும் மருத்துவ விடுப்புக்கு விண்ணப்பித்துள்ளார், கால் வலிக்காக...

ஒருவாரம் ஓய்வெடுக்க மருத்துவர் பரிந்துரைத்திருப்பதாக கூறி அதற்கான மருத்துவ சான்றிதழ்களையும் அவர் அலுவலகத்தில் ஒப்படைத்திருக்கிறார்.

ஒரு வாரம் கழித்து மருத்துவ பரிசோதனை செய்தபோது, அவருக்கு குதிகால் வலி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், மருத்துவ விடுப்பை நீட்டித்துள்ளார். இது தொடர்பான ஆவணங்களை அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு மேலதிகாரி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சென் அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அப்போது அலுவலக காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

சில நாள்கள் கழித்து, சென் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் உடல் நலம் குறித்து பொய் சொல்லி விடுமுறை எடுத்ததாக கூறிய நிறுவனம், அதற்கு இரண்டு ஆதாரங்களை கூறியுள்ளது.

ஒன்று, சென் மருத்து விடுப்பு எடுத்த நாளில் அவர் அலுவலகத்தை நோக்கி ஓடும் வீடியோவை ஆதரமாக காட்டியுள்ளது. மற்றொன்று, அவர் 16,000 அடிகளுக்கு மேல் நடந்திருப்பதாக ’சாட் அப்’ பதிவையும் ஆதாரமாக காட்டியுள்ளது அந்த நிறுவனம்.

இந்த இரண்டு ஆதாரங்களை மறுத்த சென், மருத்து சான்றுகளுடன் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சென் சட்டவிரோதமாக பணி செய்யப்பட்டிருக்கிறார் என்று தீர்ப்பு கூறியது.

மேலும், அந்த குறிப்பிட்ட நிறுவனம் சென்னுக்கு ரூ. 14.79 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்த வழக்கு சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பிய நிலையில், ஊழியர்களின் தனிப்பட்ட நடவடிக்கைகளை நிறுவனங்கள் கண்காணிப்பது சரியில்லை என்றும் விமர்சித்துள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com