ரஷ்யாவுக்கு முக்கிய பாதிப்பு... சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கிய உக்ரைன்!

drone attacks on Russian oil refineries
டிரோன் தாக்குதலால் பரவிய தீ
Published on: 

ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்திவருகிறது.

இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமும் 1 லட்சம் பேரல் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் இந்த ஆலைக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களால் ரஷ்யாவின் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

இதற்காக சிறப்பு பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஜூலை மாதத்தில் எரிபொருளின் உற்பத்தி அதிகரிக்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

 “ரஷ்யாவின் போர்த் திறனை பலவீனப்படுத்தும் நோக்கில்தான் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதனால், ரஷ்ய இராணுவத்தின் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும். மேலும், ரஷ்யாவில் உள்ள முக்கிய எரிசக்தி கட்டடங்கள் மீது தாக்குதல்கள் தொடரும்.” என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com