Dubai princess has launched a perfume - 'Divorce'.
டைவர்ஸ் என்ற வாசனை திரவியத்தை அறிமுகம் செய்துள்ள துபாய் இளவரசி ஷைக்கா மஹ்ரா.

டைவர்ஸ்… இளவரசியின் சென்ட் பாட்டில் அறிமுகம்!

Published on

கணவரை டைவர்ஸ் செய்வதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்த துபாய் இளவரசி, 'டைவர்ஸ்' என்ற பெயரில் புதிய வாசனை திரவியத்தை அறிமுகம் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை ஆட்சியாளராக இருக்கும் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்துாமின் மகள் ஷைக்கா மஹ்ரா.துபாய் இளவரசியான இவர் லண்டனில் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கும் துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான ஷேக் மனா பின் முகமது என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கைக்குழந்தையும் உள்ளது.

சமீபத்தில், துபாய் இளவரசி மஹ்ரா, தன் கணவரை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் அதிரடியாக அறிவித்தார். அந்த பதிவில், 'அன்பிற்குரிய கணவரே, நீங்கள் பிறருடன் நேரம் செலவிட்டு வருவதால், நான் விவாகரத்தை அறிவிக்கிறேன். இப்படிக்கு உங்கள் முன்னாள் மனைவி' என குறிப்பிட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார்.

அதுமட்டுமின்றி சமூக ஊடகங்களில் இருவரும் சேர்ந்தாற்போல் பதிவிட்டிருந்த புகைப்படங்களையும் நீக்கினார். இளவரசி மஹ்ரா பொதுவெளியில் விவாகரத்தை அறிவித்தது துபாயில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், தற்போது வாசனை திரவியம் ஒன்றை மஹ்ரா இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தி உள்ளார். அதற்கு 'DIVORCE' (விவாகரத்து) என பெயரிட்டுள்ளார். இந்த பெயர் சமூக ஊடகத்தில் சுவாரஸ்யமான விவாதத்தைக் கிளப்பி உள்ளது. 'கணவருக்கு விவாகரத்து முதல் எல்லாமே இன்ஸ்டாகிராம் வாயிலாகத்தான் இளவரசி கொடுக்கிறார்' என பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com