கிளாடியா கோல்டின், பொருளாதார நோபல் பரிசாளர்
கிளாடியா கோல்டின், பொருளாதார நோபல் பரிசாளர்

பொருளாதார நோபல் பரிசு பெறும் கிளாடியா கோல்டின் யார்?

அமெரிக்காவின்ஆர்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் 77 வயது கிளாடியா கோல்டினுக்கு நடப்பு ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் உழைப்புச் சந்தையைப் பற்றி கூடுதலான புரிந்துகொள்ளலை ஏற்படுத்தியதற்காக அவருக்கு இந்தப் பரிசு வழங்கப்படுவதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் உழைப்புசக்தி, வருவாயில் பாலினப் பாகுபாடு, ஊதிய சமமின்மை, தொழில்நுட்ப மாற்றம், கல்வி, மனிதர்களின் இடப்பெயர்வு ஆகிய வைதொடர்பாக இவர் ஆய்வு செய்துவருகிறார். 1990-ல் முதன்முறையாக ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவராக ஆனார். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கப் பொருளியல் கழகத்தின் தலைவராகவும் கிளாடியா பொறுப்பேற்று இருந்தார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com